சமூக அவலம் நீக்கி நன்னெறி புகட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
ஏழ்மை, வரதட்சணை கொடுமை, பொருத்தமற்ற திருமணத்தின் வழியாக பெண்ணுரிமை சிதைக்கப்படும் அவலம் பற்றி கதைகள் பேசுகின்றன. உயிர் காத்த மாணவனின் உயர் பண்பு, ஆண் குழந்தையே வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு, எதார்த்தத்தை பிரதிபலிக்கும், ‘பெண் குழந்தை’ கதை சாட்டையடி தருகிறது.
ஐம்பது ஆண்டு பகைமையை நீக்குகிறது, ‘உண்மை காதல்’ கதை. பெற்றோர் மனதில் மாற்றம் ஏற்படுத்தும்வலிமையை பதிவு செய்கிறது. முதியோர் நலன் பேணல், மனம் மாறிய காவல் துறை ஆய்வாளர், நெஞ்சை பிழியும் தண்டனை போன்றவை சமுதாயத்தின் பழுது நீக்க உதவும். மனித இயல்புகளை வாசிப்போர் மனதில் பதிய வைக்கும் நுால்.
-– புலவர் சு.மதியழகன்