ஆதி சங்கரரின் 33 சுலோகங்களுக்கு விளக்கம் தரும் நுால். அத்யாபக், உபாத்யாயர், ஆசாரியர், பண்டிட், திருஷ்டா, குருவுக்கு விளக்கம் தெரிவிக்கிறது.
தத்துவமசி என்ற மகா வாக்கியத்தை விளக்குகிறது. ஜீவாத்மா எது, பரமாத்மா யார், இரண்டும் ஒன்றா, உலகம் மாயை என்பது ஏன் போன்றவற்றுக்கு விடை சொல்கிறது.
உலகம் மாயை, துாய அறிவே பிரம்மம், அது நீ ஆகிறாய், ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே, நானே பிரம்மம், எல்லாம் பிரம்மம் என்பவை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
ஆதிசங்கரரின் படைப்பு உலகத்தை காட்டும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்