எளிய மருத்துவத்தால் வலிய நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகளை விவரிக்கும் நுால்.
சிறுநீரகங்களின் செயல்பாடுகளை புரிய வைத்து கவனிக்கச் செய்கிறது. சித்த மருத்துவத்தால் சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியும் என எடுத்துரைக்கிறது. நீர்க்கடுப்பு, நீரடைப்பு, சிறுநீர்க்கசிவு, தொற்று, கல்லடைப்பு, அல்புமின் யூரியா என பல நோய்களுக்கு மருந்துகளை விவரித்திருக்கிறது.
மனித உடலில் வேதியியல் சமச்சீர் நிலையை சிறுநீரகங்கள் தான் பேணுகின்றன என்ற உண்மையை உரைக்கிறது. தினமும் உடலில் இருந்து வெளியேறும்சிறுநீர் அளவில் மாறுதல் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை எடுத்துரைக்கிறது. சிறுநீரகங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கையேடாக மலர்ந்துள்ள நுால்.
– ஊஞ்சல் பிரபு