ஆன்மிகக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நுால்.
ஆன்மிக அடிப்படை கொள்கைகள், வழிபாட்டு முறைகள், கோவில்களின் முக்கியத்துவம் விவரிக்கப்பட்டுள்ளது. முக்கிய புனித தலங்கள், பரிகார வழிமுறைகள், இறை அருள் பெற்ற மகான்களின் வாழ்க்கையும் அடங்கியுள்ளது. சிவன், முருகன், விஷ்ணு தெய்வங்களை பற்றிய உண்மைகள் கூறப்பட்டுள்ளன.
பிரச்னைகளுக்கு தீர்வு பெற கூறப்பட்டுள்ள பரிகார வழிமுறைகள் பயனளிக்கக்கூடியவை. பக்தர்களுக்கு ஏற்பட்ட தெய்வீக அனுபவங்களையும் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. எளிய நடையில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டி. ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நுால்.
-– இளங்கோவன்