மன்னர் ஹர்ஷர் வாழ்வை நாடகமாகக் கூறும் நுால்.
ராஜியவர்தன் துவங்கி சேவகர்கள் வரை, 11 பாத்திரங்களை கொண்டுள்ளது. ஏழு காட்சிகளுடன் எளிய நடையில் அமைந்துள்ளது. உரையாடல்கள் படிப்போரை பரவசப்படுத்துகின்றன. காட்சி களங்கள், பாத்திர அமைப்பு, மேடை வர்ணனை தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
உறவுக்கும், உரிமைக்கும் போர் தொடுத்தவன் மன்னன் ஹர்ஷர் என்ற மையக்கருத்தை சொல்கிறது. தங்கையை காக்க வாளோடு சூளுரைத்தவன் ஹர்ஷர். அண்ணன் இட்ட கட்டளைக்கு கீழ்படிந்தாள் என்று குறிப்பிடுகிறது. தங்கை மீது கொண்டிருந்த பாசப் பிணைப்பை விளக்குகிறது. நாடகம் எழுத முயற்சிப்போருக்கு வழிகாட்டி நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்