புல்லாங்குழல் பற்றி விவரிக்கும் புத்தகம்.
இசையின் பெருமையோடு துவங்குகிறது. வாத்திய வகைகள் பற்றி விவரிக்கிறது. குழல் வாசிக்க தகுதிகள் பற்றி சிலப்பதிகாரம் விரித்துரைப்பதை தருகிறது. புல்லாங்குழல் உருவாக்கப்படுவதையும், அந்த கருவியின் மேன்மையையும் உணர்த்துகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் நாணலிலும் புல்லாங்குழல் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கிறது. புல்லாங்குழலில் உள்ள துளைகளும், சங்கீத மேன்மையும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. இசைக்கும் போது, பொதுவாக ஏற்படும் தவறுகளை தவிர்க்கும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. புல்லாங்குழல் வாசிக்க விரும்புவோருக்கு பொக்கிஷம்.
– டாக்டர் கார்முகிலோன்