காந்திஜியின் அரசியல், ஆன்மிக, சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளை விரிவாக ஆய்வு செய்யும் நுால். கருத்துகளை இன்றைய சமூகத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் அலசல் இடம் பெற்றுள்ளது.
இன்றைய இந்திய சமூகத்திற்கு காந்தியின் சிந்தனைகள் பொருந்துமா என ஆய்வு செய்கிறது. அரசியல், சமூக மாற்றங்களை காந்தியின் பார்வையில் அலசுகிறது. மொழி நடை அனைவருக்கும் புரியும் வகையில் ஒழுங்கமைப்புடன் உள்ளது.
காந்தியின் கொள்கைகளை மிக ஆழமாக புரிந்துகொள்ள விரும்புவோருக்கு மிகச் சிறந்த புத்தகம்.அரசியல், சமூகம், ஆன்மிகம் மற்றும் மனித நேயத்தை கொண்டுள்ள பழமை, புதுமை இணைந்த முக்கியமான நுால்.
-– இளங்கோவன்