விஷ்ணு ஸஹஸ்ர நாமங்களை புரிந்து கொள்ளும் வகையில் பொருள் விளக்கம் தந்துள்ள நுால்.
ஆயிரம் நாமங்களில், 190க்கு எளிய நடையில் விளக்கம் வழங்குகிறது. புதிய நோக்கில் புரிந்து படித்துணர வழிகாட்டுகிறது. மேற்கோள் வாயிலாக கூடுதல் புரிதலை கொடுக்கிறது. நாமங்களுக்கு வியாக்கியானங்கள், பொருள் விளக்க காரிகைகள் தந்திருப்பது சிறப்பு.
மனித நேயத்தை மேம்படுத்தக்கூடிய கருத்தோட்டங்களை மட்டுமே பதிப்பிக்கும் தேவையை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் தேவையான கேள்விகளை எழுப்பி, விடைகளையும், விவாதங்களையும் முன்வைத்திருக்கிறது. ஆன்மிகச் சொற்களுக்கு தற்கால நடையில் விளக்கம் தரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு