சின்னுக்கவுண்டர் பெருமை கூறும் நுால். திருப்பூர் அலகுமலை முருகன் கோவிலில்
திருப்பணிகள் செய்து வருவதை அறியத் தருகிறது. ஆயிரம் பிறை கண்டவர், மூன்று தலைமுறை கண்டவர், பேரூராதீனத்துடன் நெருங்கிய தொடர்புடையவர் என்று கூறுகிறது.
பெருந்தொழுவு செல்லாண்டி அம்மனுக்கு ராஜகோபுரம் கட்டியது, அலகுமலை சன்னதியில் திருப்பணி செய்ததை கூறுகிறது. கவுமார மடாலயம், பேரூர் மடாலயம், தென்சேரிமலை மடாலயம், தாராபுரம் வரன்பாளையம் திருநாவுக்கரசர் மடாலயம் என ஆதீனங்களின் அன்பையும், ஆசியையும் பெற்றது பற்றி உரைக்கிறது. கோவில்களில் தொண்டு செய்தவரை பற்றிய நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து