குடும்ப உறவுகளை கதாபாத்திரங்களாக கொண்டு புனையப்பட்டுள்ள நாவல் நுால். வளமாக வாழ்ந்து, தாழ்ந்த குடும்பம் ஒன்றையும், கண்டிப்பு மிக்க தலைவரை உடைய குடும்பம் ஒன்றையும் இணைத்து சித்தரிக்கிறது.
குடும்பத்தலைவர் கண்டிப்பால் வீட்டை விட்டு வெளியேறிய பெண், பணக்கார மருமகளின் ஆணவம், கணவனை மதிக்காமை போன்றவை மையக்கருவாக உள்ளது. குடும்பங்கள் சீரழிவதை சுட்டுகிறது.
அதில் அடுத்த தலைமுறையின் முயற்சி, அதற்குள் மலரும் காதல் என விறுவிறுப்புடன் நகர்கிறது. குடும்ப உறவுகள் மேன்மையை மையப்படுத்தியுள்ள நாவல் நுால்.
– புலவர் சு.மதியழகன்