ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வார் என சிறப்புபெயர் பெற்ற ஸ்ரீவத்சங்கரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகப் பதிவு செய்துள்ள நுால். இளையவரான ராமானுஜரை குருநாதராக ஏற்று ஸ்ரீபாஷ்யம் எழுத துணை நின்றது மற்றும் இறைத்தொண்டுகள் பரவசத்தோடு தரப்பட்டுள்ளன.
கூரேசர் பிறப்பு, இறைத்தொண்டுகளுடன் ராமானுஜர் இளமைப் பருவக்குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. கடும் இடர்ப்பாடுகளை எதிர்கொண்ட போதும் கூரேசர், சாமானியர் நலனுக்காக சொற்பொழிவுகள் ஆற்றியதை அறிய வைக்கிறது.
கூரேசர் படைப்புகள் பற்றியும், வைணவப் பரவலுக்கு ஆற்றிய பணிகளும் விளக்கப்பட்டுள்ளன. புராணக் குறிப்பு கள் புரிதலுக்கு உதவுகின்றன. கண்கவரும் வண்ணப்படங்களுடன் எளிய நடையில் அமைந்த நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு