பாபாவின் வாழ்க்கை, அருளாட்சி, மகத்துவம் மற்றும் பக்தர்களுடன் நடந்த சம்பவங்களை விளக்கும் நுால். ஆன்மிக ஆர்வலர்களுக்கு பயன் தருவதாக அமைந்துள்ளது.
பாபா வாழ்வில் முக்கிய நிகழ்வுகள், திருச்சரிதம் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாபாவின் ஆன்மிக சக்திகள், பக்தர்களுக்கு கொடுத்த உபதேசங்கள் மிகுந்த நாட்டம் உண்டாக்குகின்றன.
தொடர்ச்சியாக அறிய விரும்புவோருக்கு அரிய வாய்ப்பை வழங்குகிறது. பாபாவின் அருள், பக்தியின் முக்கியத்துவம், வாழ்க்கை நம்பிக்கை, சமாதான நிலை போன்றவற்றை தெளிவாக எடுத்துரைக்கிறது. வாங்கி வாசித்தால் பாபாவின் கருணையை அனுபவிக்கலாம்.
– இளங்கோவன்