மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பு நுால். பரபரப்பூட்டிய பின்னணியுடன் பதிவாகியுள்ளது.
உலக அளவில் மக்களிடம் அன்பை பெற்றவர் டயானா. பரபரப்பான செய்திகளில் அடிக்கடி இடம் பெற்றவர். அவரது அந்தரங்கம் பற்றி இதழ்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி இந்த புத்தகத்தில் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
முதலில் டயானாவின் மரண நிகழ்வில் துவங்குகிறது. இறுதிச் சடங்கின் போது நிகழ்ந்த சம்பவங்களை நேரடியாக பார்ப்பது போல் தொகுத்து தருகிறது. தொடர்ந்து, அதற்கு முந்தைய நிகழ்வுகளும் தரப்பட்டு உள்ளன. குறிப்பாக, சர்ச்சைக்குள்ளான நிகழ்வுகளையும் காட்சியாக வர்ணிக்கிறது. உலக மக்களிடம் டயானா பெற்றிருந்த மதிப்பை வெளிப்படுத்தும் நுால்.
– ராம்