ஆன்மிகத் தேடலில் ஈடுபடுவோருக்கு உதவும் அற்புதமான புத்தகம். சித்தர்கள் குறித்த ஆய்வு, திருவிளையாடல்கள் மற்றும் பக்தர்களுடன் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது.
சித்தர்களின் திருவிளையாடல்களை உருக்கமாக விவரிக்கிறது; மறைக்கப்பட்ட ஆன்மிக தகவல்களை பகிர்கிறது. எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆன்மிக ஒளியூட்டும் வகையில் உபதேசங்களை வழங்குகிறது. உள்ளார்ந்த ஞானத்தை வழங்கும் வகையில் உள்ளது.
ஆன்மிக ஆர்வலர்களுக்கும், சித்தர்கள் வாழ்க்கை பற்றி புரிந்து கொள்ள விரும்புவோருக்கும் பொக்கிஷம். ஆன்மிகப் பயணத்தை துாண்டும் நுால்.
– இளங்கோவன்