புதுவை வீராம்பட்டினத்தில் எழுந்தருளியுள்ள செங்கழுநீர் அம்மனை பற்றிய நுால். வரலாற்றையும், வழிபாட்டு முறைகளையும் பாடலாக தந்திருக்கிறது.
காப்பிய இலக்கணத்துக்கேற்ப நாடு, நகர் வர்ணனை, ஊர், ஆறு, திருவிழாக்கள் பற்றி அருந்தமிழ் சொற்கள் கொண்டு யாப்பு வடிவத்தில் மரபு பாடல்களால் பாடப்பட்டுள்ளது.
மக்கள் பழக்க வழக்கங்கள், பண்பாட்டு முறைகள், விளையும் பயிர்கள், காய்கறிகளின் மகத்துவம் இடம் பெற்றுள்ளன.
முத்து பல்லக்கு, தெப்ப திருவிழா, அங்காடிகளில் நடைபெறும் வணிகச் சிறப்பும் விவரிக்கப்பட்டு இருக்கிறது. எளிய நடையில் ஓசை ஒழுங்குடன் அமையப்பெற்ற குறுங்காப்பிய நுால்.
– புலவர் சு.மதியழகன்