நாட்டின் வளர்ச்சியில் அம்பேத்கரின் உழைப்பை வெளிச்சமிட்டு காட்டும் நுால். இன்றைய அரசுக்கு அம்பேத்கரின் சிந்தனைகள் வழிகாட்டுதல்களுடன் உள்ளதாக கருத்தை வெளிப்படுத்துகிறது.
பிரதமர் மோடி முன்னெடுக்கும் வளர்ச்சி திட்டங்களில், அம்பேத்கர் வகுத்த கொள்கைகளும் சிந்தனைகளும் எந்த வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளன என்பதை அலசுகிறது. முன்னேற்ற செயல்பாடுகளில் அம்பேத்கர் – பிரதமர் மோடி இடையே நிலவும் ஒற்றுமையை ஆராய்ந்து விளக்குகிறது.
நெருக்கடியான காலகட்டங்களை சமாளித்த விதங்களையும், தடைகளை தாண்டி வளர்ச்சி பணிகளை நிறைவேற்றியதில் உள்ள திறன்களையும் ஒப்பிட்டு ஆராய்கிறது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரையுடன் அமைந்துள்ள நுால்.
– மதி