மனித தவறுகளால் கல்வி நிறுவனத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு மற்றும் அநீதிகளை மையப்படுத்திய நாவல் நுால்.
கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர், அங்கு நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டு வருகிறார். முதல்வரும், பேராசிரியையும் போதையில் நடத்திய கூத்தை வெளிப்படுத்தியதால் வீண் பழி, அவமானங்களை சந்திக்கிறார். மாணவர்கள் ஆதரவு கரம் நீட்ட, இப்பிரச்னை அரசின் கவனத்திற்கு செல்கிறது.
இந்தப் பிரச்னையை சுற்றி படிப்புடன் பண்பை கற்றுக் கொடுக்க வலியுறுத்தி நகர்கிறது கதை. கல்வி நிலையங்கள் பண்பு சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டியவை என வலியுறுத்தும் நாவல்.
– டி.எஸ்.ராயன்