ஏலகிரி தாயார் சமேத கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலின் சிறப்பை உரைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
இங்கு, திருப்பதியில் திவ்ய தரிசனம் பெறுவது போன்ற அனுபவம் கிடைக்கும் என புகழ்ந்துரைக்கப்பட்டு உள்ளது.
திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை, அத்தனாவூர் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ளது ஏலகிரி மலைவாசன் கோவில். இங்கு நடக்கும் ஆன்மிக பணிகள் குறித்து இந்த புத்தகத்தில் சிறப்பு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
திருக்கோவில் பிரம்மோத்சவத்தில் பெற்ற ஆன்மிக அனுபவம் பற்றி ஒரு கட்டுரை தெரிவிக்கிறது. ஏலகிரி தாயார் திருமஞ்சன அலங்காரம், ஸ்ரீ கல்யாண வெங்கடரமணர் நின்ற, வீற்றிருந்த திருக்கோலங்களில் வண்ணப் படங்களுடன் அமைந்துள்ள நுால்.
– ராம்