சுதந்திர போராட்ட வீரர் புலி தேவரின் வாழ்க்கை வரலாற்று நுால்.
மதுரை நாயக்க மன்னர்கள் வீழ்ச்சி, புலி தேவரின் இளமை வாழ்க்கை, பாளையக்காரர் வரலாறு, வேலுார் கலவரம், போர் தந்திரங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழகத்தின் விடுதலைப் போராட்டச் சூழலை கண்முன் நிறுத்துகிறது.
நெற்கட்டான் சாவல் எல்லையில் போரிட்டு வென்றது, கோவில் திருப்பணி, அன்னதானம் செய்தல் போன்ற ஆன்மிக பணிகளில் சிறந்திருந்ததை எடுத்துரைக்கிறது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதை விவரிக்கிறது.
இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை துவங்கிய பெருமையை எடுத்து கூறுகிறது. தமிழகத்தில் நடந்த விடுதலைப் போராட்டத்தை உலகத்திற்கு அறிவிக்கும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்