மாணிக்கவாசகர் வரலாற்றையும், திருவாசக சிறப்பையும் சொல்லும் நுால்.
திருவாசகம் இசையோடு இன்னமுதம் கலந்தது. குழந்தைக்கு அமுது ஊட்டுவது போல் மாணிக்கவாசகர் அளித்த காலப்பெட்டகம். இதை படிக்கப் படிக்க சிந்தை தெளியும்; பிறப்பு ஒழியும்; இறைவன் திருவடியில் இளைப்பாறலாம் என்கிறது.
மாணிக்கவாசகர், அரிமர்த்தன பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த போதும், மனம் குழைந்து சிவன் திருவடியே சிந்தனையில் கொண்டிருந்ததை குறிப்பிடுகிறது. ஜாதி, குலம், பிறப்பு சுழலில் சிக்காமல் சிவனை கண்டடையும் வழியைப் பாடியது குறித்து விளக்குகிறது. மாணிக்கவாசகர் அருள் வரலாறும், திருவாசகப் பொருள் தேனாறும் கலந்து இனிக்கும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்