சிறுவர் – சிறுமியருக்கு ஒழுக்கம் போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அனைத்து தரப்பினரும் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தொகுப்பில், 25 கதைகள் இடம் பெற்றுள்ளன. உண்மையான நண்பனை கண்டுணர்வது பற்றி ஒரு கதை எடுத்துரைக்கிறது. பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்த மையக்கருவிலும் கதைகள் அமைந்துள்ளன.
ஒற்றுமையாக வாழ்ந்தால் எளிதாக உயர்வு அடையலாம் என்பதை, ‘உயர்வுக்கு வழி’ என்ற கதை புகட்டுகிறது. ஆபத்து காலத்தில் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை ஒரு கதை முன்வைக்கிறது.
நெருக்கடியான காலக்கட்டத்தை சமாளிக்கும் வகையில் பாத்திரங்கள் வடிக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு அறிவு புகட்டும் வகையில் அமைந்த கதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்