கண்களை பாதுகாக்கும் வழிமுறைகளுடன், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் நுால்.
மாறுகண் பாதிப்பை கண்டறியும் நுட்பம் விளக்கப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் மயோபியா, ஹைப்பர் மெட்ரோப்பியா, அஸ்டிக் மேட்டிசம் போன்ற பார்வை கோளாறுகளுக்கு உரிய காரணங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. பரவலான கண்புரை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
குளுக்கோமா, ரெட்டினோபதி, ஆம்பிலியோபியா, கார்னியில் சிராய்ப்பு, உலர் கண்கள், யுவைடிங், ஹைபீமா நோய்கள் பற்றியும் விளக்கம் தருகிறது. பால், மோர், கேரட், ஆப்பிள், மீன், முட்டை உட்கொண்டால் பார்வை குறைபாட்டை சரி செய்யலாம் என்கிறது. மதிப்புமிக்க கண்களை பாதுகாக்கும் முறைகளை விளக்கும் நுால்.
-– புலவர் சு.மதியழகன்