கருப்பின மக்கள் விடுதலைக்காக போராடி தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நுால். அர்ப்பணிப்பால் பட்ட துயரங்களை எடுத்துரைக்கிறது.
துவக்கத்தில் காந்திஜியின் சத்தியாகிரக வழிமுறையை பின்பற்றி போராடி வந்ததை கச்சிதமாக கூறுகிறது. பின்னாளில் ஆயுதங்களை வைத்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டதையும் விவரிக்கிறது. இந்த முடிவுக்காக மனம் வருந்தியதையும் எடுத்துக் கூறுகிறது.
போராட்டத்தால் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் நீண்ட நாட்கள் வாடியதை பதிவு
செய்துள்ளது. பின், விடுதலையாகி நாட்டின் அதிபராக பொறுப்பேற்று ஆட்சி செய்த தகவல்களைகொண்டுள்ளது. இறுதிக் காலத்தில் உயர்ந்த பரிசுகள் பெற்று வாழ்ந்ததையும் எடுத்துரைக்கும் நுால்.
– ராம்