தெலுங்கு எழுத்தாளர்களின் 15 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பணி ஓய்வுபெற்ற பின் நண்பர்களுடன் நடக்கும் உரையாடல், புது வாழ்க்கைக்கு துாண்டுவதாக கூறுகிறது. அலுவலக பணி சூழல், அதனால் மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்ட அவமானத்தை, ‘நடத்தையில் ஊனம்’ கதை உணர வைக்கிறது. சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் இடையே நடக்கும் உரையாடல், சிறைக்கு வந்த காரணத்தை விவரிக்கும், ‘மன்னிப்பு கிடைத்தது’ கதை உணர்வுகளுடன் கலக்கிறது.
உணவு பரிமாறுதல், ஆண் – பெண் பசியை கூறி குதுாகலிக்கும் கதை ரசிக்க வைக்கிறது. மனித வாழ்வில் ஆன்மாவின் கோஷம் என்னவாக இருக்கும் என கேள்வி கேட்கிறது. உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை, ‘பரிசு’ கதை பகிர்கிறது. ஒவ்வொன்றும் மனித உணர்வுகளுடன் பொருந்தி சுவையூட்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்