பிரபல அறிஞர்களின் சிந்தனையை தொகுத்துள்ள நுால். பொன்மொழி போல் பயன்படுத்த ஏற்ற வகையில் அமைந்துள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற அறிஞர்கள் பல்வேறு காலகட்டங்களில் கூறிய 600 பொன்மொழிகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அவை, வாழ்வை வளமாக்கும். நம்பிக்கை ஊட்டி முன்னேற வழி செய்யும். மனிதனை ஆற்றலுடன் செயல்பட வைக்கும். எந்த சூழலையும் எதிர்கொண்டு வெற்றி பெற உத்வேகமூட்டும்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தின் பின்னணியில் சிந்திக்க துாண்டும் ஆற்றல் பெற்றவை. வாழ்வில் ஏற்படும் கடின தருணங்களிலும் நல்லறிவு புகட்டி முன்னேற துாண்டும் வகையில் உள்ளன. மேடை பேச்சுகளில் பயன்படுத்தும் பொன்மொழிகளின் தொகுப்பு நுால்.
– ஒளி