ராமேஸ்வரம் கோவிலில் 1975ல் நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரைகளை தொகுத்து தரும் நுால். அறிய வேண்டிய தகவல்களின் பொக்கிஷமாக உள்ளது. ராமநாத சுவாமி சன்னதியில் உட்புறம் வெண்மை நிறத்தில் ஸ்படிகலிங்கம் இருப்பதை அறியத் தருகிறது. அதிகாலை 5:00 மணிக்கு முதல் பூஜை இந்த லிங்கேஸ்வரருக்கு நடப்பதை எடுத்துரைக்கிறது.
சுவாமி சன்னிதி முதல் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் சகஸ்ரலிங்கம் உள்ளதை குறிப்பிடுகிறது. இது, 1,000 லிங்கங்களை வழிபட்ட பலனை தரும் என்கிறது. காசி சிவனுடன் இணைந்தது; ராமேஸ்வரம் ராமருடன் தொடர்பு கொண்டது என உரைக்கிறது. கோபுரங்கள் கருங்கற்களால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள தகவலை பகிர்கிறது. அஷ்ட பந்தன விளக்கத்தையும் தரும் நுால்.
– சீத்தலைச்சாத்தன்