நவீன இசைக்கருவியான கீ போர்டு என்ற எலக்ட்ரானிக் ஆர்கனில் கர்நாடக இசையை வாசிக்க கற்றுத் தரும் நுால். இசையை நேரடியாக ஆசிரியரிடம் பயில இயலாதோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இசையின் பெருமை, ஆர்கன் பாகங்கள், ராகமும் தாளமும், ஆரம்ப நிலை பயிற்சிகள், சரளி வரிசை, ஜண்டை வரிசை, தட்டு வரிசை, ஸப்த தாள அலங்காரங்கள், வர்ணங்கள், கீர்த்தனைகள், இசைத் துணுக்குகள் என படிப்படியாக இசையின் ஒவ்வொரு அம்சங்களையும் விளக்குகிறது.
புத்தகத்தின் இறுதி பகுதியில், கீ போர்டு இசைக்கருவியை கையாளும் விதம் தனித்துவம் மிக்க படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இசையில் தாளம் மற்றும் ஒலி வித்தியாசத்தை தெளிவாக விளக்கும் நுால்.
– ராம்