நாலாயிர திவ்விய பிரபந்தத்திலிருந்து தேர்ந்தெடுத்த பாசுரங்களை தொகுத்து தந்துள்ள நுால். நாள்தோறும் ஒன்றை படிக்கும் வகையில் 365 பாசுரங்களை விளக்குகிறது. திருமாலின் பெருமைகளை எடுத்துக் காட்டுகிறது. அவன் புகழை போற்றும் வகையில் செறிவான பிரபந்தப் பாடல்களுக்கு எளிய நடையில் விளக்கம் தருகிறது. இறை வழிபாடு, அன்பு காட்டல், இறைவனோடு ஒன்றி சரணாகதி அடைதல் போன்ற தத்துவங்களின் சிறப்பை முன்வைக்கிறது.
ராமாயண, மகாபாரத கிளைக் கதைகளை உள்ளடக்கியதை உரைக்கிறது. புலனடக்கம், வாக்கு துாய்மை, நிலையாமை, பிறவி அறுத்தல், தீவினை விலக்குதல், பாவங்களிலிருந்து மீளல், உலகின் உறுதிப்பொருள் அடைதலை அறியச் செய்யும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு