முக்கோண காதலை மையப்படுத்தி அன்பை விளக்கும் நுால். காதல் அலையில் மூழ்கிய உள்ளங்கள் முத்துகளை கண்டெடுத்த பயணமாக அமைந்துள்ளது. கவிதைகள் தந்திருப்பது, தித்திப்பான அனுபவத்தை தருகிறது. காதல் உணர்வுக்கு புது அர்த்தம் ஊட்டுகிறது. ஆன்மிக அர்ப்பணிப்பும், சரணாகதியும் காதலில் இருக்குமா என்ற கேள்விக்கு, இக்கதையின் பாத்திரங்களே பதில் சொல்கின்றன.
காரணங்களை கடந்த காதல், காவியங்களை படைத்து, காலம் கடந்து நிற்கும் என உணர்த்துகிறது. தனக்கு மட்டுமின்றி தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை ஏற்படுத்தி தருவது தான் காதலின் சாரம் என உணர்த்துகிறது. முத்தாய்ப்பானது அன்பு தான் என மென்மையாக உணர்த்தும் நுால்.
– தி.க.நேத்ரா