கந்தர் அலங்காரம் பாடல்களும், அதற்கு தக்க விளக்கவுரையும் அமைந்துள்ள நுால். முதலில் கந்தர் அலங்காரம் பாடல்கள் முழுமையாக தரப்பட்டுள்ளன. பின், ஒவ்வொரு துதிக்கும் தனித்தனி விளக்கம், தெளிவுரை மற்றும் சொற்களுக்கு பொருள் விளக்கம் தரப்பட்டு உள்ளது. முருகக்கடவுள் சார்ந்து தத்துவ விளக்கம் உள்ளது.
முருகன் உருவ பெருமை, வேலனின் மயில், சேவலின் ஆற்றல், வள்ளியோடு இணைத்து கூறும் இனிய பாடல்களை படிக்கும் போது இன்ப உணர்வு ஏற்படுகிறது. கட்டுப்பாடற்ற புலன்களுக்காக வருந்துவது, அறியாமை நீக்க வேண்டுவது, மாயை வாழ்விலிருந்து மீட்க கெஞ்சுவது உருக்கமாக உள்ளது. கந்தர் அலங்காரப் பாடல்களில் தெய்வீகத்தை உணர வைக்கும் நுால்.
– மதி