ஹிந்து மதத்தை பின்பற்றுவோர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை தொகுத்து தந்துள்ள நுால். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு சங்கராச்சாரியார் கூறிய கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. ஹிந்து மதத்தில் வேதம் என்ற சொல்லுக்கு அறிவு என விளக்கம் தருகிறது. வேத மந்திரங்களின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கிறது. கணபதியின் அவதாரங்களை பட்டியலிட்டு விளக்குகிறது.
பிள்ளையார் சதுர்த்தியின் சிறப்பை போதிக்கிறது.ஹிந்து பண்டிகையின் சிறப்பும், நடைமுறைகளும் தெளிவாக்கப்பட்டுள்ளன. அன்றாடம் செய்ய வேண்டிவை குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஹிந்து மத நடைமுறையை விளக்கும் ஆன்மிக நுால்.
– ராம்