மயில் போன்ற வடிவம் உடைய சிறிய மலை மீது அமர்ந்திருக்கும் முருகன் பற்றி விளக்கும் நுால். பிள்ளைத்தமிழ் வடிவத்தில் தரப்பட்டுள்ளது. ஆறெழுத்து மந்திரத்தின் விரிவான பொருளை விளக்குகிறது. ஆறு என்ற எண்ணுக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பை கூறுகிறது. மலை மீது அமர்ந்த மயிலம் முருகனை வணங்கினால், வாழ்க்கை படிப்படியாக உயரும் என்கிறது.
மயிலத்தை சூரபத்மன் வரலாற்றோடு விளக்குகிறது. அருணகிரிநாதரின் மயிலம் திருப்புகழ் பாடலை விளக்குகிறது. முருகன் திருவடி அருள் செய்யும் தன்மை வாய்ந்தது என்று சிறப்பிக்கிறது. பிற்பகுதியில் கந்த சஷ்டி கவசம் பதியப்பட்டுள்ளது. ஸ்கந்த குரு கவசம் பாடல்கள் தரப்பட்டுள்ளன. மயிலம் மலையில் அமர்ந்துள்ள முருகன் பெருமைகளை அறிய உதவும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்