வாழ்க்கையை பொருள் நிறைந்ததாக எடுத்துக் காட்டும் நாவல் நுால். கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் சிக்கலை வெளிப்படுத்துகிறது. சமூகப் பழக்கவழக்கம், மனிதநேயம் ஆகியவற்றிற்கு இடையே ஊடாடும் சம்பவங்களுடன் கதையோட்டம் அமைந்துள்ளது. அந்த காலப் பிள்ளைகளுக்கு, பாட்டி வீட்டிற்கு செல்வது மிகவும் பிடித்தமானது. அந்த குழந்தைகளின் மனநிலையை விரிவாக எடுத்து கூறுகிறது.
ஏழ்மையை நீக்க கல்வி கைகொடுக்கும் என்ற மையக் கருத்தை சொல்கிறது. பொறியியல் கல்லுாரியில் படித்து முனைவர் பட்டம் பெற்று உயரதிகாரியாக உயர்ந்த வரலாற்றை கூறுகிறது. எளிய மொழி நடையில் வாழ்க்கை பயணத்தை நாவல் வடிவில் அறிமுகம் செய்துள்ள வாழ்க்கை வரலாற்று நுால்.
– முகிலை ராசபாண்டியன்