இறையருள் பெறும் வழிபாட்டு முறைகளையும், நலமுடன் வாழும் வழிகளையும் காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘முட்டாள் பழி வாங்கத் துடிப்பான்; புத்திசாலி மன்னிப்பான்; அதிபுத்திசாலி பிரச்னையில் இருந்து விலகுவான்’ என்கிறது. சபரிமலை அய்யப்பன் வழிபாடு குறித்த விளக்கங்கள், காந்திஜி சொன்ன ஏழு பாவங்கள் பற்றி விபரங்கள் உள்ளன.
வாஸ்து தோஷம் விலக, அக்னீஸ்வரரை வணங்க கூறுகிறது. திருவோண விரத சிறப்புகள், ஆருத்ரா தரிசன விபரங்களையும் அறியத் தருகிறது. அத்தி-, அரசு, ஆல் போன்ற மரங்களின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. புதிய செய்திகளை தந்து சிந்திக்க வைக்கும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து