கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதிக்கும், குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலைக்கும் எளிய நடையிலான உரை நுால். கம்பரின் வாழ்க்கை வரலாறும், அதை ஒட்டிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. குலோத்துங்க சோழ மன்னனோடு கம்பருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஆந்திர நாட்டின் பிரதாப ருத்திரன் ஆதரித்த செய்தி, அம்பிகாபதி காதல் போன்றவை சுட்டப்பட்டுள்ளன. கம்பர் எழுதிய புத்தக பட்டியலும் தரப்பட்டுள்ளது.
சகலகலாவல்லி மாலை தோன்றிய சூழல், குமரகுருபரருக்கு பேச்சுத்திறன் வந்த நிகழ்வு பற்றிய குறிப்புகள் உள்ளன. சகலகலாவல்லி மாலை பாடல்களுக்கு உரை வரையப்பட்டிருப்பதுடன், உரையாசிரியரின் கல்விக் கவசமும் இடம்பெற்றுள்ளது. கல்வியின் பெருமை, படிக்கும் முறையை விவரித்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்