திருக்குறளில் இன்பத்துப்பாலுக்கு உரை தந்து மெருகூட்டும் நுால்.
இன்பத்துப்பாலில் 250 குறள்களில் கற்பியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஒவ்வொரு அதிகாரத்தின் மொத்த கருத்தையும் உள்வாங்கி, தலைப்புக்கு ஏற்ற பாடலுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தெளிவுரையாக அமைந்திருந்தாலும் வசீகரிக்கிறது.
பூக்களை கண்களுக்கு ஒப்பிட்டு இருப்பதை விட, கண்கள் என்னை மட்டுமே காண பயன்படுகிறது என காதலன் பெருமிதம் விளக்கப்பட்டுள்ளது. புலத்தல் என்பதை, ஒன்றை ஈர்த்தல் என குறிப்பிடுகிறது. இதை மன வேறுபாடுகளின் அடிப்படையாக குறிப்பிடுகிறது. திருமண நிகழ்வுகளில் மணமக்களுக்கு பரிசளிக்க ஏற்ற புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்