கனவு, கனவில் கண்ட பொருட்கள் பற்றியும், அதன் பலன்களையும் விளக்கும் நுால்.
கனவால் ஏற்படும் நன்மை, தீமைகளை 273 தலைப்புகளில் அறிய தருகிறது. தலைப்பு அகர வரிசையில் தரப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரம் போல விளக்கங்கள் அமைந்துள்ளன. அந்தணரை கனவில் கண்டால், புனித நதிகளில் நீராடும் வாய்ப்பு வரும் என்கிறது.
அமிர்தம் அருந்துவது போல் கனவு கண்டால், உடல் நலத்தை கவனமாக பார்க்க வேண்டும் என்கிறது. இரவுநேர பயணம் தவிர்த்தல் போன்ற கனவு பற்றி கூறப்பட்டுள்ளது. மரண கனவுக்கு இரு வகைகளில் விளக்கம் தருகிறது. மனிதன் கனவில் வந்தால் கிடைக்கும் பலன்களையும் வரிசைப்படுத்துகிறது. கனவின் நன்மை, தீமைகளை அறிய உதவும் நுால். ஜோதிடர்களுக்கு உதவும்.
– புலவர் ரா.நாராயணன்