எளிய இனிய சந்தங்கள் உடைய பாடல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால், சிந்தனையின் ஊற்றாக விளங்குகிறது.
திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி எழுதிய, 374 பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக, ‘மனுசனை மனுசன் ஏச்சுப் பொழச்சது அந்த காலம், மடமை நீங்கி நம் உடமை கோருவது இந்த காலம்’ போன்ற விழிப்புணர்வு ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
சிந்தனையை செம்மைப்படுத்தும் விதமாக, ‘விஞ்ஞானத்தை வளர்க்க போறேன்டி’ என துவங்கும் தனிப்பாடலும் தொகுப்பில் உள்ளது. பாடல் இடம் பெற்ற திரைப்படம், வெளியான ஆண்டு, பின்னணி குரல் கொடுத்தவர் பற்றிய விபரங்களுடன் அமைந்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் நினைவில் உயிர்ப்புடம் உள்ள பாடல்களின் தொகுப்பு நுால்.
– ஒளி