பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் அமைந்துள்ளன.
பல வகையிலான புதுக்கவிதைகளும், சந்தம் நிறைந்த கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு தன்மையில் வீச்சுகள் இருப்பதை காண முடிகிறது. ஆதங்கம், சீற்றம், அன்பு, காதல், மனிதநேயம் உள்ளிட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. விழிப்புணர்வை வலியுறுத்துவதாக உள்ளன.
தற்கால சமூகச் சூழல்களை படம்பிடித்துக் காட்டு கின்றன. இயற்கையை காட்சிப்படுத்தும் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அலங்காரச் சொற்களின்றி நேரடியாக கருத்தியலை வெளிக்காட்டுகின்றன. புதுக்கவிதை ஆர்வலர்கள் விரும்பும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு