உழைப்பின் அருமை பெருமையை சிறுவர், சிறுமியருக்கு புகட்டும் வகையில் படைக்கப்பட்டுள்ள நாவல். காட்டு விலங்குகளை கதாபாத்திரங்களாக்கி எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சோம்பேறி குரங்கு ஒன்று, உழைக்க விரும்பாமல் மனம்போல் வாழ முயல்கிறது. சகோதரனுடன் கோபித்து, காடுகளில் அலைந்து திரிகிறது. ஒவ்வொரு விலங்குகளிடமும் பேசி விருந்து உண்டு நாட்களை நகர்த்துகிறது.
உழைக்காமல், உணவை தேட முயல்கிறது குரங்கு. இதனால், உழைக்கும் விலங்குகளிடமிருந்து பிரிந்து புதிய இடங்களுக்கு பயணிக்கிறது. பல உணவு வகைகளை உண்கிறது. உழைக்கும் அக்கறை இன்றி, உண்பதில் திருப்தி இன்றி மனம் போன போக்கில் அலைந்து பாடம் கற்கிறது. இறுதியில் உழைப்பின் மேன்மையை அறிகிறது. சிறுவர்களை கவரும் நாவல் நுால்.
– ராம்