ஜப்பானிய மருத்துவ முறையான ரெய்கி உடல், உள்ளம் முன்னேற்றத்திற்கு உதவுவதை எடுத்துரைக்கும் நுால்.
தொடுதல் வழியில் நோயை குணமாக்கும் மருத்துவ முறையே, ரெய்கி என்கிறது. இந்த முறையை மீட்டுருவாக்கியது ஜப்பானை சேர்ந்த டாக்டர் மிக்காவோ உசூயி. சமஸ்கிருத சுலோகம், பவுத்த சூத்திரங்களில் தொடுதல் வழியாக குணமாக்கும் மருத்துவ தகவல்களை அறிய செய்கிறது. பிரபஞ்ச ஆற்றலை பெற உண்ணாவிரத சிறப்பை குறிப்பிடுகிறது.
தொடுதல் மருத்துவம், கைவழியாக ஆற்றல் பிறருக்குச் சென்று நோய் குணமாக்குவதை குறிப்பிடுகிறது. உடலில் ஏழு சக்கரங்கள் பற்றிய அறிமுகம், தெய்வீக ஆற்றல் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடுதல் வழியாக மருத்துவ செயல்பாட்டு முறையை அறியத்தரும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்