ஆஸ்துமா நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கும் நுால்.
முறையாக மருந்து எடுத்து நோயை கட்டுப்படுத்த அறிவுரைக்கிறது. பகுதியாக கட்டுப்படுத்தினால் பருவ மாற்றத்தின் போது மூச்சுத் திணறல் ஏற்படும் என்கிறது. இந்த நோய்க்கு ஒவ்வாமையும் ஒரு காரணம் என்பதை விளக்குகிறது. எந்தப் பொருளால் ஒவ்வாமை ஏற்படுகிறது என கண்டறிந்து ஒதுக்க கூறுகிறது.
நோய் தீர புகை பிடிப்பதை அறவே ஒதுக்க அறிவுறுத்துகிறது. ஆஸ்துமா நோயாளி எவ்வகை உணவு உண்ண வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறது. மருத்துவ முறைகளையும் அறிமுகம் செய்கிறது. முறையான மூச்சுப்பயிற்சியே ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் என்று கூறும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்