பாரதியின் புதிய ஆத்திசூடி பாடல்களுக்கு விளக்க உரை போன்று அமைந்துள்ள நுால்.
ஆத்திசூடி பாடல் ஒரே வரியில் அமைந்திருப்பினும் அதற்குள் புதைந்திருக்கும் ஆழ்ந்த கருத்துகளை வெளிக்கொணர்ந்துள்ளது. எளிதில் புரியும் வண்ணம் பாரதியின் சொல்லாட்சிக்கு பொருள் விளக்கமாகவும் அமைந்துள்ளது.
சான்றாக, ‘கோல் கைக் கொண்டு வாழ்’ என்பதற்கு எழுதுகோலுடன் வாழ வேண்டும் என சுட்டுகிறது. அருஞ்சொற்பொருட்கள் அழகுற விளக்கப்பட்டுள்ளன. இன்பத்தை நுகர் என்கிறது. புதிய ஆத்தி சூடியில் பொதிந்துள்ள பாரதியின் சிந்தனைகளை எளிய நடையில் விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்