புஷ்பா தங்கதுரை.வெளியீடு:நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,105,ஜானி ஜான்கான் சாலை,இராயப்பேட்டை,சென்னை-600 014. பக்கங்கள்:184.ஒரு மனிதன் நல்லவனா என்பதை முடிவு செய்ய அவன் அறிவு மட்டும் போதாது என்பதற்கு சார்லஸ் சோப்ராஜ் உதாரணம்!திட்டமிடுவதில்-அதைச் செயலாக்குவதில்-பேச்சால் பிறரை கண நேரத்தில் வசீகரிப்பதில்- உளவுத்துறை அதிகாரிகளைக் கூட அனாயசமாக ஏமாற்றுவதில்- செஸ் விளையாட்டில் இவன் அறிவாளி;நுட்பமானவன்!ஆனால் இந்த அறிவை அவன் எதற்குப் பயன்படுத்தினான்? கொள்ளை அடிப்பதற்கு-கொலை செய்வதற்கு-நீதியின் சந்நிதானத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு...இது போன்ற குற்றங்களுக்கே இவனது அறிவு பயன்பட்டது! எண்பதுகளில் இவன் உலகப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் அடிபட்டவன்!இரும்புக் கோட்டை போன்ற சிறைச்சாலைகளிலிருந்து தப்பி சாகசம் படைத்தவன்.தெல்லி திஹார் சிறைச்சாலையில் இவன் நடத்திய சதிராட்டங்களைக் கட்டுப்படுத்தவும்;அதன்மூலம் சிறைத்துறை அவலங்களைக் களையும் முயன்றவர் பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி. அதன்மூலமே மீடியா வெளிச்சத்துக்கு வந்த சிறந்த போலீஸ் அதிகாரி.மீடியாக்கள் தான் கிரிமினல்களை ஹீரோவாக்குகிறதா?என்ற நிகழ்ச்சிக்கு கிரண்பேடியிடம் கருத்து கேட்டது ஒரு டி.வி. சானல்.சமீபத்தில் தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ள கிரண்பேடியிடம் இதைக் கேட்டதன் மூலம் சோப்ராஜின் சாகசங்களை-கொடிய குற்றங்களை நினைவூட்டியது அந்த டி.வி.சானல்! மீடியாக்களின் பரபரப்பான பக்கங்களின் செய்திகளில் இவன் பெயர் அடிபடா விட்டாலும் தெல்லி திஹார் ஜெயிலில் தண்டனைக் கைதியாக இருக்கம் சோப்ராஜ் நேபாளத்துக்குள் நுழைந்தால் தூக்கு தண்டனை காத்திருக்கிறது. அதே போல் உலக நாடுகள் பலவும் அவனைத் தண்டிப்பதற்காகக் காத்திருக்கின்றன.ஆனால் கிரிமினல் கிங் என்று வர்ணிக்கத்தக்க குற்றங்களைச் செய்த சோப்ராஜோ,நான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் என்னைக் காட்டிக் கொடுத்தவர்களைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று சிறைக் கம்பிக்குள்ளிருந்து கர்ஜித்திருக்கிறான்!இவனின் கிரிமினல் செயல்களை ஒரு திகில் நாவலைவிட விறுவிறுப்பான வகையில் அழகாகத் தொகுத்திருக்கிறார் புஷ்பா தங்கதுரை.நாவல்கள் கற்பனை;இவன் கதையோ உண்மை;உண்மையிலும் உண்மை!தாய்-தந்தை அரøணைப்பில்லாமல் வளரும் குழந்தைகள் திசைமாறி-கிரிமினல் செயல்களில் சிக்கிக் கொள்ளும் என்பதும் சோப்ராஜ் வாழ்க்கை உப செய்தியாகப் புரிய வைக்கிறது.