விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. (பக்கம்: 212).
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தரும் பல விளக்கங்களையும் நுகர்வோர் பாதுகாப்புக்குழு, குறை தீர் மன்றம் போன்றவற்றின் செயல்பாடுகளையும் விரிவாகக் கூறி எந்தெந்த வகைகளில் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம் என்பதை வழக்கு மேற்கோள்களுடன் எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர்.மருத்துவ சேவையில், பயணங்களில், வங்கி சேவையில், தொலைபேசித் துறை, மின் துறை, அஞ்சல் துறை, உணவுப் பொருட்கள், கல்வி தொடர்பாக, பொதுத் துறை நிறுவனங்கள் போன்றவைகளில் நுகர்வோர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எளிய முறையில் வழக்குகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள நுகர்வோர் அமைப்புகளின் முகவரிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.