விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. (பக்கம்: 144.)
ஆனந்த விகடன் வாசகர்களுக்கு ஏற்ப தன் "எழுத்து நடையை மாற்றியமைத்ததில் குறள் கண்ட வாழ்வும், எஸ்.எஸ்.வாசனும் முக்கிய பங்கு வகித்ததை மறக்க முடியாது" என்று அமரர் அ.ச.ஞா.,வால் சிறப்பித்துச் சொல்லப்பட்ட, இந்தக் கட்டுரைத் தொகுதியில் குறளையொட்டி வாழ்ந்து காட்டிய 27 பேரின் வாழ்க்கை நெறி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
"எது சால்பு?' என்ற வினாவிற்கு சிற்றரசர் மெய்ப்பொருள், வாழ்வையும், "கவரிமான் அன்னாராய்" சேரமான் இரும்பொறையையும், "வெல்லும் சொல்''லுக்கு சொல்லின் செல்வி கண்ணகியையும், "கொடைக்கலை''க்கு பாரியையும் இவ்விதமாக ஒவ்வொரு குறளுக்கும் ஒருவரது வாழ்க்கை பாடமாக இதில் போதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைக்கும் அழகிய ஓவியங்களோடு, நூல் பொலிவுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.