சந்தியா பதிப்பகம், பிளாட் ஏ,நியூடெக் வைபவ், 57-53வது தெரு,அசோக் நகர், சென்னை- 600083
தனிமனித உணர்வுகள் மாத்திரம் இலக்கியமாகாது? தனி மனிதனென்று ஒருவன் இருக்கிறானா என்ன? தனி மனிதனென்று நாம் நினைத்து, முன் நிறுத்தப்படுபவன் கூட்டமொன்றின் பிரதிநிதி என்கிறபோது, அவன் வேறு சமூகம் வேறல்ல என்றாகிறது. தன்னைச் சுற்றியிருக்கிற மானுடத்தின் சுகதுக்கங்களை, நன்மை தீமைகளை, பாசாங்கற்ற மொழியில், பரிவையோ, கண்டிப்பையோ வெளிப்படுத்துவது இயல்பாய் ஜெயந்தி சங்கருக்குப் பொருந்துகிறது.