நக்கீரன் பப்ளிகேஷன், ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 192).
லத்தீன் அமெரிக்க நாடுகளின் வெற்றிகரமான விடுதலைப் போராட்டங்களை விவரிக்கும் பயனுள்ள நூல். மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் தீவுகள் என மொத்தம் 41 நாடுகள் லத்தீன் அமெரிக்கா என்று அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளின் பூர்வீகக் குடிமக்களை யு.எஸ்.ஏ., அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் சிலவும் அடிமைப்படுத்தி அந்நாடுகளின் வளங்களைச் சுரண்டி வாழ்ந்த வரலாற்றையும், இப்போது அந்நாடுகளின் தலைவர் அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து எழுச்சி பெற்று விளங்கும் சுதந்திரப் போராட்ட வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நூலில் கியூபா, வெனிசுலா, பெரு போன்ற 11 நாடுகளின் விவரங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் ஆசிரியர். வரலாற்று ஆர்வம் மிக்கவர்கள் படிக்க வேண்டிய அருமையான நூல்.