விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002.) (பக்கம்: 288.)
"சேஜ்' பப்ளிகேஷன்ஸ் என்ற அகில உலக நிறுவனம்' ஆங்கிலத்தில் வெளியிட்ட அருமையான நூலின் தமிழ் வடிவமே இந்த நூல். நூலாசிரியர் தலிப்சிங், நிர்வாகத் திறமை, வணிக பரிமாற்ற ஆய்வு, தலைமைப் பண்பு மற்றும் ஆளுமைத் திறன் ஆகியவை குறித்துச் சிறப்பான ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். பணியிடத்தில் உணர்ச்சிகரமான போக்கை சமயோசிதமாகக் கையாளுவது எப்படி மற்றும் நிர்வாகம் பற்றிய பயிற்சிகளுக்குத் தேவையான சாதுர்யங்கள், நுணுக்கங்கள், அனுபவங்கள் என்று மிக விரிவாக விளக்கி இருக்கிறார். அனைவருக்குமே மிகவும் பயனுள்ள நூல்.