ஆசிரியர்: இஸட் ஒய்.ஹிம்ஸாகர், நிவேதிதா பதிப்பகம், எண்.1, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 152)
1698ல் பிறந்து 1763 முடிய 66 ஆண்டுகளே உயிர் வாழ்ந்த ட்யூபிளே இறுதி மூச்சு வரை புதுச்சேரியையும், இந்திய மண்ணையும், மக்களையும் மனதார நேசித்தவர். இவரது வரலாறு படிக்கப் படிக்க பற்பல ஆச்சரியங்களையும், வினோத வரலாற்று முடிச்சுகளையும் கொண்டது.
நேரடி வரலாற்றை விட வரலாற்று நாவல்கள் மக்களை எளிதில் சென்றடையும் என்ற எண்ணத்தில் இந்த மகத்தான வரலாற்று நாவலை படைத்துள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.
சரித்திர நாவல்களைப் படித்து ரசிக்கும் வாசகர்களுக்கு இதோ ஒரு அற்புதமான புதிய நாவல் விருந்து.